January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சன்னிலியோன் கதாநாயகியாக நடிக்கும் முதல் தமிழ் திரைப்படம் ‘ஷீரோ’

நடிகை சன்னிலியோன் தமிழில் நடிக்கும் ஷீரோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் ஸ்ரீஜித் விஜயன் இயக்கி வரும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட ஷீரோ படத்தில் சன்னிலியோன் நடித்துள்ளார்.

சைக்கோலஜிக்கல் த்ரில்லர் கதைக் களத்தைக் கொண்ட,இப்படத்தில் சன்னிலியோனி அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி பெண்ணாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் ஷீரோ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

போஸ்டரில் சன்னிலியோன் முகத்தில் வெட்டுக் காயங்களுடன், ரத்தம் தோய்ந்த நிலையில்,மிரட்டும் பார்வையுடன் இருக்கும் காட்சி, ஆங்கில படங்களில் வருவதை போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.ஷீரோ திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

சமீப காலமாக நடிகை சன்னிலியோன் தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.பாலிவுட் மட்டுமல்லாமல் தமிழ்,மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இயக்குனரும் நடிகருமான சசிக் குமாரின் படத்திலும்,இயக்குநர் யுவன் படத்திலும் தற்போது துணை கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார்.தமிழில்,வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் சன்னி லியோன்.

சன்னி லியோன் நடிக்கும் ஷீரோ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம்,கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.

தமிழில் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்கும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.