October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மீண்டும் சமூக வலைத்தளங்களில் சிம்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்துக்கள் பதிவு செய்து பெரும் சர்ச்சையில் மாட்டிக்கொள்வார். இருந்தாலும் அவரது ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஒக்டோபர் 22ஆம் திகதி காலை 9.09 மணி முதல் சிம்பு நேரடியாக சமூக வலைத்தளத்தில் மீண்டும் களமிறங்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் #SilambarasanTR என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதோடு, அவரது படங்கள் குறித்த தகவல்கள் அந்த பக்கத்தில் வெளிவரும் என்றும் எதிர்பார்த்துள்ளனர்.

சிம்பு நடித்துவந்த மாநாடு திரைப்படம் சில காரணங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

அண்மைக்காலமாக அவர் சமூக வலைத்தளத்தில் இருந்து விலகியிருந்தார். மேலும் தனது ட்விட்டர் ரசிகர் மன்றத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் தனக்கு மீண்டும் தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்வேன் எனவும் கூறியிருந்தார்.