July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘தனுஷ் 44′ திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று நாயகிகள் ஒப்பந்தம்

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும்  ‘D44′ (தனுஷ் 44) திரைப்படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

நடிகர் தனுஷ் அடுத்தடுத்து புதுப் படங்களில் நடித்து வரும் நிலையில், தனுஷின் 44 ஆவது படப்பிடிப்பு வேலைகள் நாளை (05) முதல் சென்னையில் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கார்த்திக் நரேனின் இயக்கத்தில் தற்போது ‘மாறன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் தனுஷ்.
இதனையடுத்து மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ‘தனுஷ் 44’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகள் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

ராஷி கண்ணா, நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் படத்தில் நடிப்பதுடன், இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்திற்கு வெகு விரைவில் பெயர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷுடன் முக்கிய கதாபாத்திரங்களில் இயக்குநர் இமயம் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

ஏற்கனவே நடிகர் தனுஷ், மித்ரன் இயக்கத்தில் ‘யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த மூன்று படங்களுமே தனுஷிற்கு நல்ல பெயரையும் நல்ல வசூலையும் தேடித்தந்த படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே மித்ரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இந்த புதிய படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.