January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிக்பாஸ் பிரபலங்கள் நடிக்கும் ‘கூகுள் குட்டப்பா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

பிக்பாஸ் புகழ், தர்ஷன் – லொஸ்லியா நடித்துள்ள ‘கூகுள் குட்டப்பா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

மலையாள திரைப்படமான ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன்’ தமிழில் ‘கூகுள் குட்டப்பா’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

மலையாளத்தில் சுரஜ் வெஞ்சிராமூடு நடிப்பில், இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் ‘ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’.

இந்தப் படத்தை தமிழில் இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் தயாரித்துள்ளதுடன், அவரின் உதவி இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இந்தப்படத்தை இயக்கியுள்ளனர்.

தந்தை கதாப்பாத்திரத்தில் ரவிக்குமாரும், மகனாக தர்ஷன், மகள் கதாப்பாத்திரத்தில் லொஸ்லியாவும் நடித்துள்ளார்கள்.

‘கூகுள் குட்டப்பா ‘ படத்தின் படப்பிடிப்பு தென்காசி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கூகுள் குட்டப்பா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட்டு வைத்துள்ளார்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கே.எஸ். ரவிக்குமாருடன், தர்ஷன், லொஸ்லியா, யோகிபாபு, ரோபோவும் காணப்படுவது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.