January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நூறு மில்லியன் பார்வைகளை கடந்த நடிகர் விஜயின் ‘செல்ஃபி புள்ள’ பாடல்

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய கத்தி படத்தில் வந்த செல்ஃபி புள்ள பாடல் யூடியூபில் நூறு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

செல்ஃபி புள்ள பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்திருப்பதை நடிகர் விஜயின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

ஏற்கனவே, தளபதி விஜய்யின் ஆளப்போறான் தமிழன்,வாத்தி கம்மிங்,வெறித்தனம்,என் ஜீவன் வாழுதே,ஈனா மீனா டீகா உள்ளிட்ட பாடல் வீடியோக்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளன.

அந்த வரிசையில் தற்போது 7 வது பாடலாக ‘செல்ஃபி புள்ள’ பாடலும் இடம் பிடித்திருக்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளியானது ‘கத்தி’ திரைப்படம்.

விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதை மையக் கருவாக வைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த கத்தி திரைப்படம்.

இந்த திரைப்படம் வெளியாகி மிகுந்த பாராட்டுகளையும் நல்ல வசூலையும் அமோக வரவேற்பையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கத்தி திரைப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

இப்படம் கதைக்காக பலரது பாராட்டை பெற்று இருந்தாலும், படத்தின் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டடித்தன.அந்த வரிசையில் முதலிடம் பிடித்தது தான் செல்ஃபி புள்ள பாடல்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி வரிகளில் நடிகர் விஜய்யும்,சுனிதி செளகானும் பாடிய ‘செல்ஃபி புள்ள’ பாடல் இந்தியாவைத் தாண்டி உலக தமிழர்களால் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த படத்தில் வந்த செல்ஃபி புள்ள பாடலும் அதில் வந்த காட்சிகளும் மக்களிடையே செல்ஃபி மோகம் அதிகரிப்பதற்கான ஒரு காரணமாக இருந்தது உண்மையே.