July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘பூமிகா’ திரைப்படம்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘பூமிகா’ திரைப்படம் நேரடியாக விஜய்  தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ள பூமிகா திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ‘ஸ்டோன் பெஞ்ச்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் 25ஆவது திரைப்படமாக பூமிகா திரைப்படம் உருவாகியுள்ளது.

‘கனா, திட்டம் 2, டிரைவர் ஜமுனா, பூமிகா’ போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

இதுவரை மென்மையான மற்றும் கதைக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களில் மட்டுமே நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், பூமிகா படத்தின் மூலம் த்ரில்லர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து, சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘திட்டம் 2’ திரைப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், அடுத்தடுத்து ஐஸ்வர்யா ராஜேஷின் தனித்துவமான படங்கள் வெளியாவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

தற்போது தமிழகத்தில் புதுப்படங்கள் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியிடப்படுவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், சன் டிவியை அடுத்து விஜய் டிவியும் புதிய படங்களை நேரடி ஒளிபரப்பு செய்ய தொடங்கியுள்ளது.

ஐஸ்வர்யா ராஜேஷின் பூமிகா திரைப்படம் விஜய் டிவியில் வரும் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வெளியாகும் எனவும் ஹொரர் த்ரில்லர் கதைக் களத்தை கொண்டதாக இந்தப் படம் உருவாகியுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளார்கள்.

பட வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளம் கைப்பற்றியிருப்பதால், 23 ஆம் திகதியன்று ஓடிடி தளத்திலும் ‘பூமிகா’ வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.