இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் சூர்யா வாடிவாசல் என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
தென் தமிழகத்தில் நடைமுறையிலுள்ள ஜல்லிக்கட்டுக் கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகவுள்ளது.
வீ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு,ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இந்நிலையில், வாடிவாசல் படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றியுள்ள நடிகர் சூர்யாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சூர்யா தந்தை, மகன் என இருவேடங்களில் நடிக்கவுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.