லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் தான் ‘நெற்றிக்கண்’.
இந்த திரைப்படத்தை அவள் படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார்.
படத்திற்கான அனைத்து வேலைகளும் முடிவுற்று வெளியீட்டுக்கு தயாராக இருந்தது.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் குறிப்பிட்ட தேதியில் நெற்றிக்கண் திரைப்படத்தை வெளியிட முடியாமல் போனது.
இந்நிலையில் அந்த திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
தற்போது ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை ஹொட்ஸ்டார் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.
அந்த திரைப்படத்தின் உரிமையை வாங்கியதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
மேலும் ஹொட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் விரைவில் நெற்றிக்கண் திரைப்படம் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது வெளியீட்டு திகதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.