January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொலைக்காட்சியில்நேரடியாக வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’

நடிகர் விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

துக்ளக் தர்பார் திரைப்படத்தை அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் என்பவர் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார், அவரின் அடியாளாக விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்திருக்கிறார். இவர் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதியின் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இப்படத்தில் மஞ்சிமா மோகன், பார்த்திபன், கருணாகரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி நடித்த ,‘96’ பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். இப்படத்தை மாஸ்டர் படத்தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்திருக்கிறார்.

முன்னதாக இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்,அமேசான் பிரைமில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில் தற்போது விஜய்சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் ,சன் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

துக்ளக் தர்பார் திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக முன் பல புதிய திரைப்படங்களை சன் டிவி நேரடியாக ஒலிபரப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.