January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கமல்ஹாசனின் விக்ரம் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை டுவிட்டரில் வெளியிட்டுள்ள கமல்ஹாசன்,”வீரமே வாகையைச் சூடும், மீண்டும் துணிகிறேன், நம் இளம் திறமைகளை உம் முன் சமர்ப்பிக்க.நேற்று போல நாளையும் நமதாக வாழ்த்தட்டும் தாயகம். விக்ரம்… விக்ரம்… ஆரம்பிச்சுட்டோம்” என பதிவிட்டிருக்கிறார்.

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கும் படம் தான் விக்ரம் .

கமல்ஹாசன் தயாரித்து நடிக்கும் விக்ரம் படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிட தயாரானதால் விக்ரம் படப்பிடிப்பு சற்று தள்ளி வைக்கப்பட்டது.

பின்னர் கமல்ஹாசனின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக, விக்ரம் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.

கமல்ஹாசனின் விக்ரம் பட டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

கண்களைக் கட்டியவாறு அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரி உட்பட அனைவரும் அமர்ந்திருக்க ,ஆரம்பிக்கலாங்களா என கமல்ஹாசன் பேசும் அந்த வசனத்தோடு,தலை வாழை இலையில் விருந்து வைத்த அந்த டீசர் பெருமளவு ரசிகர்களாலும் அனைத்துத் தரப்பாலும் பேசப்பட்டது.

விக்ரம் படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் பகத் பாசில் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

தற்போது வெளியாகியிருக்கும் விக்ரம் பட டீசரில் நடிகர் கமல்ஹாசனின் முகம் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசிலின் முகம் என மிரட்டலாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

விக்ரம் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார்.