பாகுபலி புகழ் நாயகன் பிரபாஸ்,பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கும் ராதே ஷ்யாம் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்திய அளவில் ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபாஸின் முந்தைய படமான சாஹோ 400 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.இதனால் இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ராதே ஷ்யாம் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்திய அளவில் பெற்றிருக்கிறது.
ஒரே நேரத்தில் தென்னிந்திய மொழிகளான தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தியில் தயாராகிறது ராதே ஷ்யாம்.
சாஹோ படத்தை தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.ராதா கிருஷ்ணா இயக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராதே ஷ்யாம் படத்தின் ஓடிடி உரிமத்தை கைப்பற்ற இந்திய அளவில் கடும் போட்டி நிலவி வந்தது.
கடும் போட்டிக்கு மத்தியில் நெட்பிளிக்ஸ் இந்த படத்தின் இந்தி ஓடிடி உரிமையை பெற்றிருக்கிறது.
அதே நேரத்தில் மற்ற மொழிகளில் வெளியிடும் உரிமையை ஜீ நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது.மேலும் இந்தப்படத்தின் அனைத்து மொழி தொலைக்காட்சி உரிமையை கடும் போட்டிக்கு மத்தியில் ஜி நிறுவனமே கைப்பற்றி இருக்கிறது.
முன்பெல்லாம் இந்தியாவில் இந்தி திரைப்படங்கள் மட்டுமே 100 கோடிகளைத் தாண்டி தயாரித்து சில நூறு கோடிகளை லாபமாக ஈட்டும் .
ஆனால் இந்தி சினிமாவுக்கு நிகராக கன்னடம்,தெலுங்கு,தமிழ் திரைப்படங்களும் 100 கோடிகளுக்கு மேல் தயாரித்து,விற்பனை உலகளவில் நடைபெறுவது தென்னிந்திய திரைத்துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது .
அந்த வகையில் இந்தப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்தப் படத்தில் பிரபாஸ் ஜோடியான பூஜா ஹெக்டே, தற்போது தமிழில் தளபதி விஜயுடன்,பீஸ்ட் திரைப்படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்.