பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் எமர்ஜென்சி என்ற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்திருக்கிறார்.
ஜான்ஸி ராணி,மணிகர்னிகா போன்ற படங்களை ஏற்கனவே கங்கனா ரணாவத் இயக்கி நடித்திருந்தார்.
தற்போது இந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகை கங்கனா ரணாவத் எமர்ஜென்ஸி என்கிற படத்தை இயக்குகிறார்.
நடிகை கங்கனா ரணாவத் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக முன்னரே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்காக கங்கனா ரணாவத் ஒப்பனை, ஆடை அலங்கார ஒத்திகையை செய்தும் பார்த்திருந்தார்.
ஆனால் இந்த எமர்ஜென்சி படம் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை சொல்லாது என்றும் இந்தியாவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட காலத்தில் நடந்த ஒரு சம்பவமாக இருக்கும் என்றும் கங்கனா தெரிவித்திருந்தார்.
பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்தத் திரைப்படத்தை கங்கனாவே திரைக்கதை வடிவமைத்து இயக்குவதாக அறிவித்திருக்கிறார்.
கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கும் மேலாக ‘எமர்ஜென்ஸி’ திரைக்கதையில் பணியாற்றியதாக குறிப்பிட்டுள்ள கங்கனா ரணாவத் தன்னைவிட வேறு யாரும் அந்தப்படத்தை இயக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் இயக்குநர் பொறுப்பை ஏற்பதில் மகிழ்ச்சி என தெரிவித்துள்ள கங்கனா ரணாவத்,ரிதேஷ் ஷா என்ற கதாசிரியரோடு இணைந்து இப்படத்திற்காக பணியாற்றுவதாக கூறியுள்ளார்.
பிங்க்,கஹானி,கஹானி 2,ராக்கி, ஹேண்ட்ஸம் படங்களில் பணியாற்றியவர் தான் கதாசிரியர் ரிதேஷ்.
இதற்காக சில நடிக்கும் வாய்ப்புகளை தான் தியாகம் செய்ய வேண்டியிருக்கும் என கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
இருந்தபோதிலும் இந்த சவாலை ஏற்பதில் தான் தீர்மானமாக இருப்பதாக கங்கனா ரணாவத் குறிப்பிட்டுள்ளார் .
இந்த எமர்ஜென்ஸி படம் சுவாரசியமான ஒரு பயணமாக இருக்கும் எனவும்,அதனால் மிகுந்த உற்சாகமாக தான் இருப்பதாகவும் இந்த படம் தனது சினிமா வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்விற்கான மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்குமெனவும் கங்கனா ரணாவத் தெரிவித்திருக்கிறார்.