July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம்

இயக்குனர் வெற்றிமாறன் திரைக்கதையில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புதிய படம் அதிகாரம்.

அதிகாரம் படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் திரைக்கதை அமைத்து வசனம் எழுதுகிறார்.

இப்படத்தை சிவகார்த்திகேயன் நடித்த -எதிர் நீச்சல், காக்கிசட்டை,தனுஷ் நடித்த -கொடி உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை.செந்தில்குமார் இயக்கவுள்ளார்.

இந்திய அளவில் மிகப்பெரிய பொருட் செலவில் இந்த அதிகாரம் திரைப்படம் எடுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆடுகளம் ,பொல்லாதவன் உள்ளிட்ட படங்களை தயாரித்த ஃபை ஸ்டார் கிரியேஷன்ஸ் மற்றும் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.

இதே ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பில், S.கதிரேசன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ருத்ரன் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அதிகாரம் படத்தின் படபிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் மலேசியாவில் தொடங்கப்படும் என படக்குழுவினர் அறிவித்து இருக்கிறார்கள்.

மேலும் இந்த அதிகாரம் படத்தின் ஒரு பகுதி படப்பிடிப்பு இந்தியாவில் நடைபெறும் என சொல்லப்படுகிறது .

தற்போது அதிகாரம் படத்திற்கான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வழக்கம் போல் அல்லாமல் சற்று வித்தியாசமான முறையில் திகில் ஊட்டக்கூடிய வகையில் அமைந்திருக்கிறது அதிகாரம் படத்தின் போஸ்டர்கள்.

பேய் கதைகளில் நடித்து புகழ் பெற்ற ராகவா லாரன்ஸ் மீண்டும் ஆக்ஷன்,திரில்லர் என வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுவது ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதிகாரம் படத்தின் இரு போஸ்டர்களையும் பார்க்கும்போது ராகவா லாரன்ஸின் முன்னைய படங்களைப் போல திகிலுக்கு குறைவே இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.