July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தளபதி விஜய்யின் 65ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘தளபதி 65’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தளபதி விஜய்யும், தளபதி 65 பட இயக்குநர் நெல்சன் திலிப் குமாரும் வெளியிட்டிருக்கிறார்கள்.

நடிகர் விஜய்யின்  65ஆவது படத்துக்கு ‘பீஸ்ட்’ என பெயரிடப்பட்டுள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நாளைய தினம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதில் துப்பாக்கியுடன் காட்சியளிக்கும் விஜய்யின் முழு உருவ படம் போஸ்டரில் வெளியிடப்பட்டுள்ளதுடன் ‘தளபதி 65’ படம் ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைக்கின்றார்.

தற்போது இந்த தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜயின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

விஜய்யின் ஒவ்வொரு பிறந்தநாளின் போதும், அவர் நடித்துக் கொண்டிருக்கும் படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும்.

அந்த வகையில் இந்த வருட பிறந்தநாள் ஸ்பெஷலாக தளபதி 65 பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என கடந்த சில தினங்களாகவே எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.