தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாரா.
அவர் தற்போது ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கும் 2 தமிழ் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் வெளியாவதற்கு தயாராக இருக்கிறது.இந்த படத்தின் வெளியீட்டு திகதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் அண்ணாத்த,விஜய் சேதுபதி,சமந்தா உடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் மிலந்த் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் ஆகிய படங்கள் நயன்தாரா கைவசம் இருக்கின்றன .
அதேபோல் மலையாள திரைப்படமான லூசிஃபர் தெலுங்கு ரீமேக்கில் மஞ்சு வாரியர் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இவைபோக தற்போது தமிழில் இரண்டு புதிய திரைப்படங்களில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
தமிழ் திரைப்படங்களுக்கு தொடர்ந்து கதை கேட்டு வந்த நயன்தாரா இரண்டு இயக்குனர்களின் கதைகளை தேர்வு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த புதிய படங்கள் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு கொரோனா அச்சுறுத்தல் ஓரளவு கட்டுக்குள் வந்தவுடன் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.