July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்த ‘அவெஞ்சர்ஸ்’ இயக்குநர்கள்

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது .

இதற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து சரிபாதியாக நேர்மறை கருத்துக்கள் வந்திருக்கின்றன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி,ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன்,உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜகமே தந்திரம்.

படம் பிரம்மாண்டத்தை கொடுத்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என கூறப்படுகிறது.

வழக்கம்போல் தனுஷின் நடிப்பு மாஸ் என்றாலும், இப்படம் தனுஷின் நடிப்பிற்கு ஏற்ற படம் இல்லை என சொல்லப்படுகிறது.

ஜகமே தந்திரம் படத்தில் வரும் ஈழத் தமிழர்கள் தொடர்பான கதை அமைப்பு,வசனங்கள் திருப்திகரமாக இல்லை எனவும், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போன்று இருப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜகமே தந்திரம் பட வெளியீட்டை முன்னிட்டு தனுஷுக்கு அவெஞ்சர்ஸ் பட இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

ஜகமே தந்திரம் பட வெளியீட்டை முன்னிட்டு அவெஞ்சர்ஸ், த க்ரே மேன், இயக்குநர்களான ருஸ்ஸோ சகோதரர்கள் தமது ட்விட்டர் பக்கத்தில், படத்தின் ட்ரெய்லரை பகிர்ந்து தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தற்போது அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படமான ‘த க்ரே மேன்’ படத்தில் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சூப்பர்டா தம்பி- என தமிழில் குறிப்பிட்டு, தனுஷுடன் சேர்ந்து பணி புரிந்ததில் மகிழ்ச்சி,‘ஜகமே தந்திரம்’ படக்குழுவினருக்கு வாழ்த்துகள் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் தனுஷ் ,மிக்க நன்றி,இது எனக்கு மிகப்பெரிய விஷயம் எனவும், நீங்கள் மிகவும் இனிமையானவர்கள் என குறிப்பிட்டிருக்கிறார்.