July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொகுப்பாளர்களாகும் நடிகை தமன்னா, விஜய் சேதுபதி!

தமிழ் ,தெலுங்கு ,கன்னட சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தமன்னா.

தற்போது தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் இவர், தற்போது நிகழ்ச்சி தொகுப்பாளராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

நடிகை சமந்தாவை போன்றே தமன்னாவுக்கும் தெலுங்கில் அதிகளவான ரசிகர்கள் இருக்கின்றனர்.

நடிகை தமன்னா தெலுங்கு மொழியிலான தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார்.

திரைப்படம், வெப்சீரிஸ் என பலவற்றை தாண்டி தற்போது டிவி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க களமிறங்கியிருக்கிறார் தமன்னா.

இந்திய தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான ஸ்டார் பிளஸில் வெற்றிகரமாக ஓடிய ‘மாஸ்டர் செஃப் சமையல் தொடரை தொகுத்து வழங்க உள்ளார்.

இந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி தமிழ், தெலுங்கு, கன்னடா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த மிகப்பெரும் சமையல் நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா மாஸ்டர் செஃப் நிகழ்ச்சிக்காக, அதிகளவிலான ஊதியத்தை பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல் தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில், முன்னணி நடிகர்கள் இந்த மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்கள்.

மிகப்பெரும் ரியாலிட்டி ஷோவான மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியை, தமிழில் விஜய் சேதுபதியும், கன்னடத்தில் கிச்சா சுதீப்பும் தொகுத்து வழங்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.