
நடிகர் ராம் பொத்தினேனி 2006ஆம் ஆண்டு தேவதாஸு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.
அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதைத் தொடர்ந்து ஜகடம், ரெடி, கணேஷ் ஜஸ்ட் கணேஷ் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர்,இன்று தெலுங்கு திரைத்துறையில் தவிர்க்க முடியாத முன்னணி கதாநாயகனாக வலம் வருகிறார்.
தெலுங்கின் இளம் கதாநாயகன் ராமுடன் இயக்குனர் லிங்குசாமி இணைந்து தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளில் படம் ஒன்றை எடுக்க இருக்கிறார்.இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு பெப்ரவரியில் வெளியானது.
இதைத் தொடர்ந்து படப்பிடிப்புக்கு முந்தைய வேலைகள் பரபரப்பாக நடைபெற்றது.சூட்டிங் லொகேஷன் தேர்வு செய்வது ,நடிகர் நடிகையை தேர்வு செய்வது என்ற வேலைகள் போய்க்கொண்டிருக்கின்றன.
தற்சமயம் கொரோனா என்பதினால் படப்பிடிப்பு பணி மட்டும் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.
அதேநேரம் படத்தில் ராம் பொத்தினேனிக்கு வில்லனாக அருண் விஜயிடம் கேட்கப்பட்டிருக்கிறது.
இன்னும் அவர் தரப்பிலிருந்து முழு சம்மதம் பெறப்படவில்லை எனத் தெரிகிறது.
இந்த கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்கும் என தயாரிப்பு தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கிறது.
உப்பெண்ணா படப் புகழ் கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் ராமுடன் ஜோடி சேர்கிறார்.
இதனிடையே ஏ.ஆர்.முருகதாஸ் ராம் பொத்தினேனியை இயக்க ஆர்வமாக இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருப்பதாகவும் மற்றொரு தகவலும் கோலிவுட்டில் வலம் வருகிறது.