நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பொஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த அக்டோபர் 4-ந் தேதி தொடங்கியது.
இந்த சீசனில் போட்டியாளர்களாக, ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சோம் சேகர், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
பிக் பொஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து பத்து நாட்களைக் கடந்துள்ள நிலையில் இவ் வாரம் முதல் போட்டியாளரை வெளியேற்றும் படலம் (Eviction Process) ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந் நிலையில் இன்று பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளினி அர்ச்சனா பிக் பொஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
அர்ச்சனா இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இது குறித்த புரோமோவொன்றும் வெளியாகியுள்ளது.
குறித்த புரோமோவில் பிக் பொஸ் வீட்டுக்குள் அர்ச்சனா வருவது போன்றும்,அவரின் திடீர் என்ட்ரியை பார்த்து உற்சாகமடைந்த மற்ற போட்டியாளர்கள், அவரை கட்டியணைத்து வரவேற்கும் காட்சிகளும் உள்ளன.
அர்ச்சனா வீட்டிற்குள் நுழைந்துள்ளதால் பிக் பொஸ் நிகழ்ச்சி மேலும் களைகட்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.