இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் வெளியான ஃபேமிலி மேன் தொடர் பெரிய வெற்றியை பெற்றது.
அதைத் தொடர்ந்து மனோஜ் பாஜ்பாய்,பிரியாமணி,சமந்தா,சந்தீப் கிஷன் மற்றும் பலர் நடிக்க இத் தொடரின் இரண்டாம் பாகத்தை ஃபேமிலி மேன் 2 என்று அதே இயக்குனர்களை கொண்டு தயாரித்தனர் .
அதன் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இந்தப் படத்தில் சமந்தா ஈழத்து பெண்ணாக நடிக்கிறார்.மேலும் வெளியான ட்ரெய்லரில் தமிழர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது போன்ற காட்சி அமைப்பு இருந்ததனால் சீமான், வைகோ மற்றும் ஏனைய தமிழ் ஆர்வலர்கள் மிகப்பெரிய போராட்ட குரல் எழுப்பினர்.ஷேம் ஆன் டு யு சமந்தா என்று ஹாஷ்டக்கும் ட்ரெண்டிங் ஆனது.
அனைத்து தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பவே, தமிழக அரசும் மத்திய அரசுக்கு இந்த தொடரை நிறுத்தும்படி கடிதம் அனுப்பியிருந்தது.
ஆனால் இதை எதையுமே கவனத்தில் கொள்ளாமல் அமேசன் நிறுவனம் ஒளிபரப்பு செய்து இருக்கிறது.
இது தமிழக மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மேலும் அரசியல் தலைவர்களும் தமிழ் ஆர்வலர்களும் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதையும்,தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கு மத்திய அரசு என்ன பதில் நடவடிக்கை எடுத்தது என்பதும்,வரும் காலங்களிலேயே தெரியவரும்.