
‘சொட்ட சொருகிடுவேன்’ என்ற ஒற்றை வசனத்தின் மூலம் மிகப் பிரபலமான குழந்தை நட்சத்திரமான மானஸ்வி இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவின் மகளாக கலக்கியிருப்பார்.
இவர் நகைச்சுவை நடிகர் கொட்டாச்சியின் மகள்.இமைக்கா நொடிகள் படத்துக்கு பிறகு நிறைய படங்களில் நடித்து வந்தாலும் இவர் அண்மையில் நடித்து வந்த விழுது என்ற படம் அனைவராலும் எதிர்பார்ப்போடு பார்க்கப்படுகிறது.
ஏனெனில் இதில் நகைச்சுவை நடிகரும் அவருடைய தந்தையுமான கொட்டாச்சி இந்த விழுது படத்தை இயக்கி இருக்கிறார்.
இதன் பர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியிருக்கிறது.இதைப் பார்க்கையில் ஒரு தந்தைக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பு அழகாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பேபி மாங்க் புரொடக்சன் மற்றும் மானஸ்வி புரொடக்சன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு விக்கி இசையமைத்துள்ளார்.
சற்று வித்தியாசமான கதைக் களமாக விழுது அமைந்திருக்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இப்போதிருக்கும் அசாதாரணமான சூழ்நிலையில் பொறுத்திருந்து படத்தை தியேட்டர்களில் வெளியிட போகிறார்களா அல்லது ஓடிடி யில் வெளியிடப் போகிறார்களா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.