கே.ஜிஎஃப் படத்தின் மூலம் உலக அளவில் கவனத்தை ஈர்த்தவர் பிரபல கன்னட நடிகர் யாஷ்.இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ஜூலை 16 ஆம் திகதி வெளிவர இருந்தது.
ஆனால் கொரோனா பெரும் தொற்று காரணமாக நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமுலில் இருப்பதால் அந்த முடிவை படக்குழு தள்ளிவைத்துள்ளது..
இத்தகைய கொரோனா பெரும் தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமுலில் உள்ளதால் திரைத்துறையை சார்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக தினசரி ஊதியம் பெறும் திரைத்துறை அடிமட்டத் தொழிலாளர்கள் வருமானம் இன்றி மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் கே ஜி எஃப் படத்தின் கதாநாயகன் யாஷ், கன்னட திரையுலகை சேர்ந்த, 21 துறையில் உள்ள தினசரி வருமானம் பெறும் சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாயை நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் செலுத்த இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், இப்போதிருக்கும் நெருக்கடியான அசாதாரண சூழ்நிலையில் இது ஒரு தீர்வாகாது.இருப்பினும் நம்பிக்கையின் கீற்றாக இது இருக்கும் என்று தெரிவித்தார்.