October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஜகமே தந்திரம்’ படத்தின் டிரைலர் வெளியீடு

2019 இல் ஆரம்பிக்கப்பட்ட ஜகமே தந்திரம் எனும் இப்படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் என்று மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றது.

இதற்கு ஏற்றாற் போல் ,என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன், என்ற பாடல் இணையத்தில் வைரல் ஆனது.

அதைத் தொடர்ந்து இன்னும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது

இது திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு முன்னர் அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக படத்தை ஓடிடியில் வெளியிட முடிவானது.

அதன்படி இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் கைப்பற்றியது.மேலும் இது ஒரே நேரத்தில் பல மொழிகளில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் தெரிகிறது.

இதன் தொடர்ச்சியாக இந்தப் படத்தின் டிரைலர் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

“தப்பு பண்றேன் அவ்வளவுதான். இதுல பெருசு சிறுசுன்னு அளவு எல்லாம் கிடையாது” என்று தனுஷ் உச்சரிக்கும் இந்த வசனம் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது .

அதைப்போலவே “இங்கு உண்மையை கூட அவளுக்கு பிடிச்ச மாதிரி கதையா சொல்லனும் “எனும் வசனம் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.

வை நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் ஹொலிவூட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ நடித்திருக்கிறார்.