
விழியிலே விழுந்தது என் வானம் என்று அண்மையில் வெளிவந்த எஃப்ஐஆர் படத்தின் மெலடி பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
விஷ்ணு விஷால், மஞ்சிமா மோகன் இணைந்து நடிக்கும் இந்த படத்தில், இயக்குனரும் நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
இதன் டிரைலரும் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஷ்ணு விஷால் இதற்கு முன் ஏற்றிராத புதிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார்.
இது தியேட்டர்களில் வெளியாக வேண்டிய படம் என்றாலும் கூட இன்றைக்கு இருக்கும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தினால் படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இதை தொடர்ந்து இந்த படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டாரில் விரைவில் எதிர்பார்க்கலாம்.இதன் தொலைக்காட்சி உரிமத்தை விஜய் டிவி கைப்பற்றியிருக்கிறது.
அதேபோல் சிவகார்த்திகேயன் தயாரித்த வாழ் திரைப்படமும் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
அருவி என்று வித்தியாசமான திரைப்படத்தை இயக்கி, கருத்தியல் மற்றும் வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இந்த வாழ் படத்தை இயக்கியிருக்கிறார்.
இதை போலவே கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் படமும் சோனி லைவ் ஒடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
க்ரைம் திரில்லர் வடிவத்தில் இருக்கும் இப்படத்தின் டிரைலர் 2018 இல் வெளியானது.
பல இடையூறுகளை கடந்து இந்த படமும் விரைவில் ஓடிடி இல் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் அரவிந்த் சுவாமி,ஸ்ரேயா,கிட்டி, சந்தீப் கிஷன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.