October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பத்து வருடங்களுக்கு முன்னர் ஒருவர் பெற்ற ரசிகர் கூட்டத்தை இன்றைய நடிகர்கள் பெறுவது கடினம்;தமன்னா

தமிழ்,தெலுங்கு ,இந்தி, கன்னடம் என பல்வேறு மொழி திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை தமன்னா நவம்பர் ஸ்டோரி என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார்.

ஓடிடி, வெப் தளங்கள், டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியால் தற்போது நட்சத்திர அந்தஸ்தின் தன்மை வேகமாக மாறி வருவதாக நடிகை தமன்னா குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் சினிமாவா, ஓடிடியா இரண்டில் எது என்பதைத் தேர்வு செய்யும் பிரச்சினை தனக்கில்லை என தெரிவித்திருக்கிறார் தமன்னா.

ஆனால், பத்து வருடங்களுக்கு முன்னர் ஒருவர் பெற்ற ரசிகர் கூட்டத்தை இன்றைய தலைமுறை நடிகர்கள் பெறுவது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன் என தமன்னா கூறியுள்ளார் .

தற்போது நிலவும் தொற்று நெருக்கடியில், ஒரு திரைப்படத்தை சுற்றியுள்ள உணர்வுகள் ,திரைப்படங்களை பார்க்கும் விதம் மாறும் என அவர் குறிப்பிட்டுள்ளார் .

தான் இதுவரை க்ரைம் த்ரில்லர் ஸ்டோரியில் நடிக்கவில்லை எனவும் ஆகவே இந்த நவம்பர் ஸ்டோரி அதனை பூர்த்தி செய்யும் எனவும் தமன்னா கூறியிருக்கிறார்.