January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விஜய் சேதுபதியின் “800” படத்தின் மோஷன் போஸ்டர்

இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.

ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தை பெரும் பொருட் செலவில் மூவி ட்ரெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் தர்மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு போஸ்டர் அண்மையில் வெளியானது. முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.

முந்தைய நேர்காணலில் போது விஜய் சேதுபதி கூறியதாவது, “முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுடன் இணைந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.”

அவர் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சிறந்த விளையாட்டு வீரர் மற்றும் உலகம் முழுவதும் தனது அடையாளத்தைப் பதித்த ஒருவர். முரளியின் பாத்திரத்தை சித்தரிப்பது எனக்கு ஒரு சவாலாக இருக்கும் என கூறியிருந்தார்.

ஈழ தமிழர்கள் பலரும் முத்தையா முரளிதரனின் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்பொழுது வெளியாகி உள்ளது.

800 படத்தின் படப்பிடிப்பை வரும் டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறார்களாம். இலங்கை, இங்கிலாந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

படம் அடுத்த ஆண்டு இறுதியில் வெளியாக இருக்கிறது. இந்தி,வங்காளம், சிங்களம் எனப் பலமொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.