July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.எம்.டி.பி சினிமா இணையதளத்தில் அதிக புள்ளிகளை குவித்த ‘சூரரை போற்று’

தமிழ் மொழியில் மட்டுமல்லாது டப் செய்யப்பட்டு மலையாளம், கன்னடம் ,தெலுங்கு ஹிந்தி என தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்ற படம் சூரரைப்போற்று .

இது இந்தியாவில் குறைந்த விலை விமான பயணத்தை தந்த ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம்.

திரையைத் தாண்டி அரசியல் மற்றும் அதிகாரிகள் மட்டத்திலும் இந்தப்படம் போற்றி கொண்டாடப்பட்டது .

கடந்த தீபாவளி பண்டிகையின் போது வெளிவந்த இந்த படம் பின்னர் அமேசன் தளத்தில் வெளியானது.

இந்நிலையில் இந்தப்படம் ஐ.எம்.டி.பி இணையதளத்தின் தரவரிசையில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் இந்த மூன்றாவது இடம் என்பது உலக அரங்கில் சிறந்து விளங்கிய ஆயிரம் படங்களில் மூன்றாவது இடம்.

முதலிடத்தில், 9.3 புள்ளிகளைப் பெற்று ’ஷஷாங்க் ர்டம்ப்ஷன்’ படமும், ’காட்பாஃதர்’ 9.2 புள்ளிகளையும் பெற்று இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ஒஸ்கார் பட்டியலிலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது