July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்; ‘அண்ணாத்த’ அப்டேட்

ஹைதராபாத்தில் நடைபெற்ற “அண்ணாத்த” படப்பிடிப்பை முடித்து கொண்டு சென்னை திரும்பியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஹைதராபாத்தில் “அண்ணாத்த” படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
இதில், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஆகியோரின் முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தனி விமானம் மூலம் சென்னை திரும்பியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இதனிடையே,  மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சு  ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகின்றது.

படப்பிடிப்புக்கு மத்தியில் ரஜினிகாந்த் மோகன் பாபுவை சந்திக்க சென்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.

தர்பார் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில்,“அண்ணாத்த” படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கின்றனர்.

டி. இமான் இசையமைக்கும் “அண்ணாத்த” திரைப்படம் தீபாவளியையொட்டி நவம்பர் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் “அண்ணாத்த” படப்பிடிப்பை முடித்து கொண்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

This slideshow requires JavaScript.