June 16, 2025 19:27:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் காலமானார்!

நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் இன்று  செவ்வாய்க்கிழமை காலமானார்.

1985 ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டியராஜன் இயக்கிய ஆண் பாவம் திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நெல்லை சிவா.

இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர பாத்திரங்களிலும் நெல்லை சிவா நடித்துள்ளார்.

இவர் வடிவேலுவுடன் இணைந்து “கண்ணும் கண்ணும்” திரைப்படத்தில் நடித்த ‘கிணத்த காணோம்’ நகைச்சுவை காட்சி மிகவும் பிரபலமடைந்தது.

அவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.