February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க அறுதிப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது.

இந்நிலையில் முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு திரையுலக பிரபலங்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

பெரும்பான்மையான தொகுதிகளில் முடிவுகள் வெளியாகி விட்டன. இன்னும் ஒரு சில தொகுதிகளுக்கு மட்டுமே முடிவுகள் வெளியாக இருக்கின்றன.

தி.மு.க தலைமையிலான கூட்டணி சுமார் 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்ற நிலையில், தி.மு.க ஆட்சி அமைக்க உள்ளதால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

அதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ் உயரிய வெற்றி. வாழ்த்துக்கள் மு.க ஸ்டாலின். மாற்றத்துக்கான தீர்ப்பைத் தமிழக மக்கள் வழங்கியிருக்கின்றனர். மாற்றத்தைப் பார்ப்பேன் என்று நம்புகிறேன் வாழ்த்துக்கள் என பதிவிட்டிருக்கிறார்.

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கான, தங்களது தெளிவான நம்பிக்கையான மு.க.ஸ்டாலினை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.சாதி மத வேறுபாடுகளைக் கடந்து சமூக நீதியை நிலைநாட்ட தங்களது தலைமையிலான ஆட்சியில் சமரசமற்ற முன்னெடுப்புகள் அமைய வாழ்த்துகள் என பா.ரஞ்சித் டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

நமது புதிய முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வெற்றிக்கு வாழ்த்துக்கள். சகோதரர் உதயநிதி அவர்களுக்கும் வாழ்த்துகள். இந்த கடினமான காலகட்டத்தில் உங்கள் ஆட்சியை அதிக எதிர்பார்ப்புகளோடு எதிர்நோக்கியிருக்கிறோம் என நடிகர் ஜெயம்ரவி வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

மு.க. ஸ்டாலினுக்கும் சகோதரர் உதயநிதிக்கும் மிகப்பெரிய வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் நிர்வாகத்தில் சிறந்த ஆண்டுகள் வரும் என்று விரும்புகிறேன் என விக்ரம் பிரபு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

மேலும் நடிகர் சித்தார்த்தும் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

இதேபோல் நடிகர் சூரியும் ,40 வருட கடின உழைப்பிற்கும் ,பொறுமைக்கும் பலனாக 6 வது முறை தி.மு.க சார்பில் தமிழக முதல்வராக பதவி ஏற்கும் கழக தலைவர் @mkstalin
அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என டுவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

திமுக தலைவராக தேர்தலை சந்தித்து தமிழக முதல்வராக பொறுப்பேற்கும் @mkstalin
அவர்களுக்கு வாழ்த்துக்கள் … வாழ்த்துக்கள் @Udhaystalin
#DMK @Anbil_Mahesh
என இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டிருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கும், உதயநிதி ஸ்டாலினுக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் என நடிகர் சதீஷ் தெரிவித்திருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் அவர்கள், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மற்றும் ஒட்டுமொத்த தி.மு.க.வுக்கு வாழ்த்துக்கள். உங்கள் ஆட்சியை எதிர்நோக்கியுள்ளேன். எங்களை உயர்த்துங்கள். உங்களது இந்தப் பயணம் தமிழகத்துக்குச் சிறப்பானதாக இருக்கட்டும் என வரலட்சுமி சரத்குமார் பதிவிட்டிருக்கிறார்.

மு.க.ஸ்டாலினுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். சகோதரர் உதயநிதி அவர்களே, மிகுந்த மகிழ்ச்சி என வாழ்த்துக்களை பதிவிட்டு இருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி எஸ்

அனைவரும் எவ்வளவு வருடங்கள், எவ்வளவு கடினமாக உழைத்தார்கள் என்பதை நான் தனிப்பட்ட முறையில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு உரிய வெற்றி தான். மு.க.ஸ்டாலின் தலைமையின் கீழ் தமிழகம் மக்களுக்கான, முற்போக்குக் கொள்கைகளைப் பார்க்கக் காத்திருக்கிறோம். உங்களது அட்டகாசமான வெற்றிக்கு வாழ்த்துக்கள் முக ஸ்டாலின் அவர்களே, என விஷ்ணு விஷால் பதிவிட்டிருக்கிறார்.

நமது புதிய முதல்வர் மு.க. ஸ்டாலினை கொண்டாட வேண்டிய, வரவேற்க வேண்டிய நேரம் இது. மனமார்ந்த வாழ்த்துக்கள் உதயநிதி அவர்களே. புதிய அரசுக்கு என் வாழ்த்துக்கள். உரித்தான வெற்றி என வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் சிபிராஜ்.

ஸ்டாலின் அவர்களுக்கும், உதயநிதி அவர்களுக்கும் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பதிவிட்டிருக்கிறார்.