November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தவறான சிகிச்சையால் முகத்தில் பாதிப்பு; நடிகை ரைசா வில்சன் குற்றச்சாட்டு

தோல் மருத்துவர் செய்த தவறான சிகிச்சையால் தன்னுடைய முகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அந்த பதிவில்,

“ நான் தோல் மருத்துவர் டொக்டர் பைரவியை சிறிய முக சிகிச்சைக்காக சந்தித்தேன். ஆனால் அவர் எனக்கு தேவையில்லாத சிகிச்சையை வலுக் கட்டாயமாக அளித்தார். அதனால் தற்போது எனது முகம் இப்படி மாறியிருக்கிறது. இது தொடர்பாக அவரை நான் சந்திக்க முயன்றேன். ஆனால் அவர் என்னை பார்க்க மறுத்துவிட்டார். அவரது உதவியாளர்கள் அவர் சென்னையில் இல்லை என்று கூறியதாக அவர் அந்த பதிவில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் சிகிச்சைக்கு பின்னர் வீங்கிய முகத்தின் புகைப்படத்தையும் பதிவில் இணைத்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் ஒன்றில் அறிமுகமான ரைசா, அதனைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தார். அதன் பின்னர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட படங்களில் ரைசா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.