January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

’99 சாங்ஸ்’ வெளியீடு; ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் எழுதி தயாரித்துள்ள 99 சாங்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ளது.

99 சாங்ஸ் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் அதற்கு சினிமா பிரபலங்களும் ரகுமானின் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ஏ. ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் தயாரிப்பில் வெளியாகியுள்ள ’99 சாங்ஸ் திரைப்படத்தை கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

99 சாங்ஸ் படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் ஜியோ நிறுவனம் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சென்னையில் 99 சாங்ஸ் படத்தின் ப்ரிமீயர் காட்சி திரையிடப்பட்டது. அதில் நடிகர்கள் சிலம்பரசன்,இயக்குனர் கௌதம் மேனன்,நடிகை கீர்த்தி சுரேஷ் ,விஜய் சேதுபதி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

99 சாங்ஸ் திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் திரைப்படம் என்பதால் பலரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் .

இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.ரஹ்மானை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்தியுள்ளார் .

எப்போதும் சிறந்ததை செய்யும் உங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ள 99 சாங்ஸ் படம் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன். ரஹ்மான் ஜி. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும் என ரஜினிகாந்த் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.