May 2, 2025 18:10:11

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்

ஒத்த செருப்பு படத்திற்கு அடுத்ததாக பார்த்திபன் இயக்கும் படம்  ‘இரவின் நிழல்’.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றுவது உறுதியாகியுள்ளது.

பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்த ஒத்த செருப்பு திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படம் முழுவதும் பார்த்திபன் என்ற ஒற்றை கதாபாத்திரம் மட்டுமே வருவதைக் காணக் கூடியதாக இருந்தது.

மேலும் இப்படம் நல்ல பெயரையும் வசூலையும் பெற்றதோடு, இத்திரைப்படத்திற்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

ஒத்த செருப்பு படத்தை அடுத்து ‘இரவின் நிழல்’ என்ற தனது புதிய படத்திற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார் பார்த்திபன் .

‘இரவின் நிழல்’ திரைப்படம் முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

 

மேலும் இப்படத்திற்கு சிறப்பு இசைப்புயல் ஏ. ஆர் .ரகுமான் இசை அமைப்பதாகும்.ஆகவே பாடல்கள் குறித்து தற்போதே ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது .

உலக அளவில் பலரும் ஒரே ஷாட்டில் திரைப்படத்தை எடுக்கும் முயற்சியைச் செய்திருந்தாலும், ஆசியாவில் பார்த்திபன் தான் இந்த முயற்சியை முதலில் கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஏ.ஆர். ரகுமான் இரவின் நிழல் திரைப்படத்தில் இசையமைப்பதை உறுதி செய்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரகுமான் பேசியதை பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

அதில் எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏ.ஆர்.ஆர். வாய் கேட்பது அரிது என ரகுமான் பேசியதை குறிப்பிட்டுள்ளார் பார்த்திபன்.