January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இசைஞானி இளையராஜாவின் குரலில் மாமனிதன் படப் பாடல் வெளியானது

தட்டிப்புட்டா தட்டிப்புட்டா இதயக் கதவை என இளையராஜாவின் குரலில் ஆரம்பிக்கும் மாமனிதன் படப்பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இசைஞானி இளையராஜா பாடும் தட்டிப்புட்டா மெலடி பாடல் இளையராஜாவின் குரலில் 80 ,90 களில் வந்த பாடல்களை நினைவுபடுத்துவது போல் மனதை வருடத்தான் செய்கிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இது வீடியோ வடிவ பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் படப்பிடிப்பு தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

படத்தைப் பார்க்கும்போது இதில் விஜய் சேதுபதி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாக நடிப்பதை நாம் காணமுடிகிறது. காட்சிகளை படமாக்குவது போல இப்பாடலில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. இது ஒரு குடும்ப கதை என இந்த பாடலின் காட்சிகளை நாம் பார்க்கும்போது தெரிகிறது.

விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தின் பாடலை நீண்ட இடைவேளைக்கு பிறகு இசைஞானி இளையராஜா பாடியிருப்பது சிறப்பம்சமாகும்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள மாமனிதன் படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள முதல் பாடல் வெளியாகி இருக்கிறது.

இந்த மாமனிதன் படத்தின் மூலம் இயக்குனர் சீனு ராமசாமியும் நடிகர் விஜய் சேதுபதியும் நான்காவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாமனிதன் படத்திற்காக முதன்முறையாக தந்தையும், மகனும் (இளையராஜாவும் யுவன் சங்கர் ராஜாவும் ) இணைந்து இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்கள் என்பது சிறப்பான விடயமாகும் .

இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஏற்கனவே கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பியார் பிரேமா காதல் படத்தை தயாரித்து நல்ல வெற்றியையும் வசூலையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.