January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மாஸ்டர்’ ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி

விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

மாஸ்டர் படம்தான் கொரோனா அச்சுறுத்தலுக்குப் பின் மக்களை திரையரங்குகளுக்கு வரவழைத்த முதல் படம் என்ற பெருமை எப்போதுமே இருக்கிறது .

மேலும் தமிழகத்தில் அதிக வசூலில் ஈடுபட்ட திரைப்படங்களில் மாஸ்டர் படமும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது .

தற்போது மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பல்வேறு தயாரிப்பாளர்கள் போட்டியிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால் மாஸ்டர் படத்தின் உரிமைகளை வைத்திருக்கும் லலித் குமார் பெரும் உற்சாகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

விரைவில் ஹிந்தி ரீமேக் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது மாஸ்டர் படக்குழுவினர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் ,விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன்,சாந்தனு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர்.

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை லலித் குமார் வெளியிட்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.