January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைதி திரைப்படத்துக்கு நான்கு விருதுகள் அறிவிப்பு

Karthi Khaidi Movie Photos HD

சிறந்த தயாரிப்பு நிறுவனத்திற்கான விருது, சிறந்த வில்லன் நடிகருக்கான விருது, சிறந்த துணை நடிகருக்கான விருது, சிறந்த சண்டை பயிற்சிக்கான விருது என 4 விருதுகள் கைதி திரைப்படத்துக்கு கிடைத்துள்ளது.

2019 இல் வெளியான கைதி திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்க,இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.இந்த படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்திருந்தார்.இந்தப் படத்தில் காதல் காட்சிகளும் பாடல்களும் இடம் பெறவில்லை. ஆனாலும் சற்றும் தொய்வில்லாமல் மிகச்சிறப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

ஜப்பான் நாட்டில் வழங்கப்படும் ஒசாகா தமிழ் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல் 2019ஆம் ஆண்டிற்கான விருது பட்டியலை அறிவித்து உள்ளது.

இதில்தான் கைதி திரைப்படம் நான்கு விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.சிறந்த தயாரிப்பு நிறுவனமாக கைதி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ்,சிறந்த வில்லன் நடிகராக அர்ஜுன் தாஸ், சிறந்த துணை நடிகருக்கான விருதை ஜார்ஜும், சிறந்த சண்டை காட்சி வடிவமைப்பிற்காக அன்பு மற்றும் அறிவு ஆகியோரும் என 4 விருதுகளை இந்த திரைப்படம் பெற்றுள்ளது.