
தலைவி படத்தின் ட்ரெய்லர் மார்ச் 23 ஆம் திகதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான தலைவி திரைப்படத்தை ஏ.எல்.விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் இயக்கி உள்ளனர்.
இதை படத்தில் ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.
இந்நிலையில்,இந்த திரைப்படத்தின் டீஸர் மட்டுமே சமீபத்தில் வெளியான நிலையில்,தற்போது கங்கனா ரணாவத் பிறந்த நாளான மார்ச் 23 ஆம் திகதி தலைவி படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.
அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம், ஏப்ரல் 23 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், கங்கனா ரணாவத் பிறந்தநாளன்று தலைவி படத்தின் ட்ரெய்லரை வெளியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது .இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.