June 1, 2025 20:14:06

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ படத்தின் நாயகியாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கும் அந்தகன் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இதில் பிரசாந்த் ஹீரோவாக நடிக்க, இயக்குனரும் நடிகரும் பிரசாந்தின் தந்தையுமான தியாகராஜன் படத்தை இயக்குகிறார்.

ஹிந்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்ற அந்தாதுன் திரைப்படத்தின் உரிமையை பெற்று தமிழில் இந்தப் படம் தயாராகிக்கொண்டிருக்கிறது.

இதில் கதாநாயகியாக நடிக்க பொருத்தமான கதாநாயகிக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததில் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று இறுதியாக பிரியா ஆனந்த் முடிவு செய்யப்பட்டு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை தியாகராஜனின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் மூவிஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

முன்னதாக இந்த படத்தை மோகன்ராஜா மற்றும் பெட்ரிக் ஆகியோர் இயக்குவதாக இருந்தது.
இருவருமே அடுத்தடுத்து விலகிக்கொள்ள தியாகராஜன் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டு படத்தை டைரக்ட் செய்கிறார்.

இந்த படத்தில் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் என நட்சத்திரங்கள் பலர் நடிக்கவுள்ளனர்.