October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சகுந்தலம்’ படப்பிடிப்பு ஆரம்பம்; சமந்தாவை கொண்டாடும் ரசிகர்கள்

தெலுங்கில் உருவாகும் புராணக் கதையான ‘சகுந்தலம்’  படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தில் சகுந்தலையாக தற்போது தமிழ் சினிமா மட்டுமல்ல மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருக்கும்  சமந்தா நடிக்கிறார்.

காளிதாசரின் புராண கதையில் இருந்து சகுந்தலையின் காவியத்தை தெலுங்கில் படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

வரலாற்றுப் படங்கள்,புராணக்கதைகளை பிரம்மாண்டமாக திரைப்படம் ஆக்குவதில் தெலுங்கு சினிமா மிகவும் பிரபலம்.பாகுபலி,ருத்ரமாதேவி என பல வெற்றி சரித்திர படங்களை வழங்கியது தெலுங்கு சினிமா.

அந்த வகையில் தற்போது ‘சகுந்தலம்’ என்ற பெயரில் சகுந்தலை புராணக் கதையின் ஒரு பகுதியை திரைப்படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இதற்கான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின் முதல் நாள் பூஜையில் கலந்துகொண்ட சமந்தாவின் அழகிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன .

வெள்ளை நிற சாரியில் அழகாக காட்சியளித்திருக்கிறார் சமந்தா.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

விதவிதமாக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்கும் சமந்தாவை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சகுந்தலம் திரைப்படத்தினை பிரபல தெலுங்கு இயக்குனர் குணசேகரன் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே அனுஷ்கா நடித்து தமிழ், தெலுங்கில் வெளியான ருத்ரமாதேவி மற்றும் தெலுங்கில் வெற்றி பெற்ற ஒக்கடு, அர்ஜுன், சைனிகுடு உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.

சகுந்தலையாக சமந்தாவும், அவரது காதலன் துஷ்யந்தனாக தேவ் மோகனும் நடிக்கிறார்கள்.

ஹைதராபாத்தில் இதற்கு பிரத்தியேகமாக மேடை வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதில்  புராணக்கதைகளில்  எவ்வாறு வனப்பகுதி அமைந்திருக்குமோ அதற்கேற்றவாறு மான்கள், மயில்கள் ,யானைகள், பசுக்கள் என அழகாக பூக்களால்  சகுந்தலம் என பெயரிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது அந்த மேடை .

படப்பிடிப்பில் கலந்து கொண்ட சமந்தா, தான் கமர்ஷியல் படம் முதல் த்ரில்லர் படம் வரை நடித்து விட்டதாகவும், அந்த படங்களுக்கு பெரிய அளவில் கஷ்டப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார்.

தனது திரை வாழ்க்கையில் நடித்த 50 படங்களில் எத்தனையோ கதாபாத்திரங்கள் ஏற்றிருந்தாலும், ஒரு புராணப்படத்திலோ அல்லது இளவரசியாகவோ நடிப்பது தனது கனவு என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் சகுந்தலை திரைப்படம் அப்படி அல்ல எனவும் இளவரசியாக நடிக்க போகும் பெருமை ஒருபுறம் இருந்தாலும் அதை சிறப்பாக செய்ய வேண்டுமே என்கிற கவலை நிறைந்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியிருக்கிறார்.

நிறைய நகைகள், பளபளக்கும் உடைகள் அணிந்து ஒரு சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்கிற கனவு இந்த படத்தில் நிறைவேறி உள்ளதாக சமந்தா தெரிவித்திருக்கிறார் .

பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் சகுந்தலம் படத்தின் ஒரு பகுதியாக, தான் இருப்பதில் பெருமை கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

விசுவாமித்திர முனிவருக்கும், மேனகைக்கும் பிறந்த சகுந்தலை, அரசனான துஷ்யந்தனை காதலிக்கிறார்.

பின்னர் துருவாச முனிவர் சாபத்தால் அந்த காதலையே துஷ்யந்தன் மறக்கும் நிலை ஏற்படுகிறது.

பல கஷ்டங்களை தாண்டி துஷ்யந்தனுடன் சகுந்தலை எப்படி இணைகிறார் என்பது தான் கதை.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இப்படம் தயாராகிறது .

This slideshow requires JavaScript.

தம