January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அஜித்குமாரின் பிறந்த நாளன்று வெளியாகும் வலிமை பட பர்ஸ்ட் லுக்

நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாளான மே மாதம் முதலாம் திகதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

அஜித் குமார் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படமான வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது.

இருந்தபோதிலும் நடிகர் அஜித்குமாரின் வலிமை படம் குறித்த எந்த அப்டேட்டும் ,எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதனால்தான் அஜித்தின் ரசிகர்கள் அரசியல் நிகழ்வுகளிலும் ,பொது மேடைகளிலும் ,கட்சித் தலைவர்களின் டுவிட்டரிலும், கிரிக்கெட் விளையாட்டின் போதும் வலிமை பட அப்டேட் கேட்டு கூச்சலிட்டு வந்தனர்.

இறுதியாக பொறுமையின் எல்லையைத் தாண்டிய அஜித் ரசிகர்கள் , சமூக வலைத்தளங்கள் மூலமாக நேரடியாகவே தயாரிப்பாளர் போனி கபூரிடம் அப்டேட் கேட்டு சண்டைக்கு சென்றனர்.

இதனையடுத்தே நடிகர் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார், ரசிகர்களை பொறுமை காத்திருக்குமாறும் விரைவில் படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் மே ஒன்றாம் திகதி அன்று வெளியிடப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

போனி கபூர் ஒரு வழியாக தற்போது அதிகாரபூர்வமாக வலிமை ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் திகதியை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த தகவலை அஜித்தின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.