January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யோகி பாபு நடிக்கும் மண்டேலா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள மண்டேலா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த மண்டேலா திரைப்படத்தை அறிமுக இயக்குனரான அஸ்வின் என்பவர் இயக்கியுள்ளார்.

விறுவிறுப்பாக படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், படக்குழுவினர் தற்போது மண்டேலா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள்.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில்,டீசர் வெளியாக உள்ளதாக பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மண்டேலா படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருக்கிறார்.

சமீபகாலமாக சில புது திரைப்படங்கள் நேரடியாகவே தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுகிறது .அந்த வகையில் இந்தப் படத்தையும் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பதாக கூறப்படுகிறது .

யோகி பாபுவின் படம் என்றாலே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது, ஆகவே இந்த படமும் முழு நீள நகைச்சுவை படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கலாம்.