January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக தயாரிக்கும் ’99 ஸாங்ஸ்’ திரைப்படம்

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் முதல் முறையாக தயாரிக்கும் 99 ஸாங்ஸ் படத்திற்கு அவரே கதை எழுதி இசையமைத்துள்ளார்.

ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு கதை எழுதி இசை அமைத்துள்ளதால் சினிமா வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மியூஸிக்கல் டிராமா ஃபிலிமான இப்படத்தை அறிமுக இயக்குநரான விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் இஹான் பாத் மற்றும் எடில்ஸி வர்கீஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

ரஹ்மான் இந்தப் படத்தை தனது வை.எம்.மூவிஸ் பேனரில் தயாரித்துள்ளார்.

ரொமான்டிக் காதல் படமான 99 ஸாங்ஸ் குறித்த அறிவிப்பை ஏ.ஆர். ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

99 ஸாங்ஸ் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரில் மாதம் 16 ஆம் திகதி தமிழில் வெளியிடப்படும் என்று மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் என அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் படம் தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

போராடும் ஒரு பாடகர்,எப்படி திறமையுள்ள, வெற்றிகரமான இசை அமைப்பாளராக மாற விரும்புகிறார் என்பது பற்றிய கதையே இந்த திரைப்படம் என  கூறப்படுகிறது.