June 15, 2025 19:02:58

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கமலுக்கு வில்லனாகும் ராகவா லோரன்ஸ்

மாநகரம்,கைதி,மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜின் அடுத்த படமான ‘விக்ரம்’ இல் கதாநாயகனாக கமல்ஹாசன் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க நிறைய நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் ராகவா லோரன்ஸிடம் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது .ஏறக்குறைய அவர் நடிப்பது உறுதி என்றே படத்தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து செய்திகள் வருகின்றன.

நடன இயக்குனர்,கதாநாயகன்,திரைப்பட இயக்குனர்,தயாரிப்பாளர் என சினிமாவில் முக்கிய துறைகள் அனைத்திலும் தன் முத்திரையைப் பதித்தவர் ராகவாலோரன்ஸ்.

தற்போதைய தமிழ் சினிமாவில் முக்கியமான 10 கதாநாயகர்களில் ஒருவராக திகழ்கிறார் இவர்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் கமலுக்கு எதிராக வில்லனாக நடிப்பதன் மூலம் நடிப்பில் தன்னுடைய பரிமாணத்தை வேறு விதமாக காண்பிக்க தயாராகிவிட்டார் ராகவாலோரன்ஸ்.

எது எப்படி இருப்பினும் உலக நாயகன் கதாநாயகனாக ஒருபுறம் பேய்களின் நாயகன் ராகவாலோரன்ஸ் வில்லனாக மறுபுறம் என படம் ரசிகர்களுக்கு நிச்சயமாக விருந்து படைக்கும் என எதிர்பார்க்கலாம்.