July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சாய்னா’ வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘சாய்னா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

இந்தியாவில் புகழ்பெற்ற விளையாட்டு வீராங்கனையான சாய்னா நேவாலும் ஒருவர். தோனி, மேரி கோம் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

அற்தவகையில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாய்னா நேவால் இந்தியாவிற்காக பேட்மிண்டன் விளையாட்டில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர்.

இயக்குநர் அமேல் குப்தா இயக்கத்தில் சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கப்படுவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து தொடங்கப்பட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்து ட்ரெய்லரும் வெளியாகியுள்ளது.

இந்தத் திரைப்படத்தில் ,சாய்னா நேவாலாக ஹிந்தி நடிகை பிரனிதி சோப்ரா நடித்துள்ளார். இந்தப்படத்தில் சிறு வயது சாய்னாவாக காட்டப்படும் சிறுமியை பார்க்கும்போது அச்சு அசல் சாய்னாவைப் போன்றே இருப்பதாக ட்ரைலரை பார்த்த ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

சாய்னா நேவால் தனது சிறு வயதிலிருந்து சந்தித்த வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, அழுகை என அனைத்தும் ட்ரைலரில் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதாக தற்போது வரவேற்பை பெற்றிருக்கிறது.

இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் மார்ச் 26 ஆம் திகதி திரைப்படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்