July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் அஜித்!

தமிழ் திரையுலகில் ‘தல’ யாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.

இவரின் படங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பும், மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் உள்ளது.
இதற்கு முக்கியமாக சொல்லப்படும் காரணம் அவருடைய நடிப்பு திறமை.

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார், நடிப்பு மட்டுமன்றி இயல்பிலேயே இவர் ஒரு ரேஸ் பிரியர்.

பைக் மற்றும் கார் என ரேஸில் கலக்குவார். ரேஸை போலவே புகைப்படம் எடுப்பது மற்றும் ஆளில்லாத சிறிய விமானங்கள் இயக்குவது என்று பன்முக திறமை கொண்டவர் அஜித்குமார்.

அந்த வகையில், அண்மைக்காலமாக சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார் அஜித் குமார்.

இதைத்தொடர்ந்து 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

இதற்காக அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக அஜித்குமார் சென்னையில் ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தன.

இந்நிலையில் அவர் பயிற்சி எடுத்த பின்னர் தற்போது போட்டியில் கலந்துகொண்டு தங்கப்பதக்கமும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அஜித் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.

This slideshow requires JavaScript.