January 21, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னையில் நடைபெறவுள்ள அண்ணாத்த படப்பிடிப்பு

நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படப்பிடிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அண்ணாத்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அண்ணாத்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்பட்டது .

இதனை அடுத்து ரஜினியின் உடல்நிலையும் பாதிக்கப்பட சென்னை திரும்பிய அவர் ஓய்வெடுத்து வருகிறார்.

அதன் பிறகு படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என எல்லோரிடமும் ஒரு கேள்வி எழுந்த நிலையில் தற்போது மார்ச் 15ஆம் திகதி சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்தப் படத்தில் முன்னணி நட்சத்திரங்களான நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,மீனா,குஷ்பு,சூரி,சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

மார்ச் மாதம் 15 ஆம் திகதி ஹைதராபாத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில்,தற்போது அந்த திட்டத்தை படக்குழுவினர் சென்னைக்கு மாற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் எனவும், அதன் பின்னர் சில முக்கிய காட்சிகள் வடமாநிலங்களில் படமாக்கப்படும் எனவும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.