January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வெளியீட்டுக்கு தயாராகும் சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்று படம்

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாற்று படமான ‘சாய்னா’ திரைப்படத்தின் வெளியீட்டு திகதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் தோனி உள்ளிட்ட விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில்,கடந்த 2019 ஆம் ஆண்டு அமேல் குப்தா இயக்கத்தில் சாய்னா நேவால் வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இதில்,சாய்னா நேவாலாக பிரனிதி சோப்ரா இறகுப் பந்தை சுழற்றி அடித்து நடித்திருக்கிறார்.

இந்த படத்திற்காக பிரனிதி சோப்ரா தீவிர பேட்மிண்டன் பயிற்சி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

சாய்னா திரைப்படம் வரும் மார்ச் 26 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டிருக்கிறது .

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சாய்னா நேவால் இந்தியாவிற்காக பேட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.