July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹர்பஜன் சிங்,லொஸ்லியா நடிக்கும் பிரண்ட்ஷிப் பட டீசர் வெளியீடு

கலக்கலான ஹர்பஜன்சிங் மற்றும் ஸ்டைலிஷான லொஸ்லியா, மிரட்டலான அர்ஜுன் என வைரலாகி வருகிறது பிரெண்ட்ஷிப் பட டீஸர்.

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முதல் முறையாக சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கி உள்ள படம் ஃப்ரெண்ட்ஷிப்.

இந்த படத்தில் நாயகியாக இலங்கை தமிழ் பெண்ணான லொஸ்லியா நடிக்கிறார். இவர் விஜய் டிவியில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானதன் மூலம் இந்த பட வாய்ப்பு கிடைத்தது.

அண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்ற தர்ஷன், லொஸ்லியா இணைந்து நடிக்கும் திரைப்படத்திற்கான பூஜையும் இடப்பட்டது .இதனை கே. எஸ். ரவிக்குமாரின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்குவதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் முதல்முறையாக லொஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப் பட டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிரண்ட்ஷிப் படம் விறுவிறுப்பாக ஆக்சன், காமெடி கலந்த திரைக்கதையாக உருவாகியிருப்பதை டீசர் மூலம் நாம் பார்க்க முடிகிறது.

டீசரை பார்க்கும் போதே படம் கலகலப்பாக இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

முழுக்க முழுக்க கிரிக்கெட்டை மையமாக வைத்து திரைக்கதை ஓடுவதை நாம் பார்க்கமுடிகிறது. இதில் சதீஷ் ,ஹர்பஜன் சிங்கின் காட்சிகள் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு பிரெண்ட்ஷிப் படத்திலிருந்து ஒரு சில காட்சிகள் டீஸராக தொகுத்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரெண்ட்ஷிப் படத்தின் டீசர் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை சென்னையில் ஒரு நாள் 2 ,படத்தை இயக்கிய ஜான் பால் ராஜ் மற்றும் ஷியாம் சுந்தர் ஆகியோர் இயக்குகின்றனர்.

படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் ஹர்பஜன் சிங்கின் தமிழ் கோச் சரவணன் பாண்டியன் மற்றும் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.