January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் ஆர்யா

இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கவுள்ள அடுத்த படத்தில் நடிகர் ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ஆர்யா தனது திருமணத்தின் பின்னர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார் .

அந்த வகையில் டெடி, சார்பட்டா பரம்பரை, எனிமி ,சந்தனத்தேவன், மத கஜ ராஜா, பாண்டியன், அரண்மனை 3 ,சங்கமித்ரா என வரிசையாக படங்களை கைவசம் வைத்திருக்கிறார் ஆர்யா.

காதலும் கடந்து போகும்,சூது கவ்வும் ஆகிய படங்களை இயக்கியவர் தான் நலன் குமாரசாமி.

அண்மையில் ‘குட்டி ஸ்டோரி’ என்ற ஆந்தாலஜி கதையை இயக்கியிருந்தார் நலன் குமாரசாமி. அதில் விஜய் சேதுபதி, அதிதி பாலன் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த வெப் சீரிஸுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது ஆர்யா கதாநாயகனாக நடிக்க உள்ள புதிய படத்தை நலன் குமாரசாமி இயக்கவுள்ளார்.

குட்டி ஸ்டோரிக்கு கிடைத்த வரவேற்புக்கு பின்னர் ,இந்தப் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது என்றே கூற வேண்டும்.

இந்த படம் ஒரு ஃபேன்டஸி திரில்லர் கதை எனவும் நடிகர் ஆர்யா இதுவரை நடிக்காத கதை அம்சம் எனவும் சொல்லப்படுகிறது.

ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.