January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

37 வருடங்களின் பின்னர் தயாராகும் ‘முந்தானை முடிச்சு’ இரண்டாம் பாகம்

1983 ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கி நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் முந்தானை முடிச்சு.

ஆயிரம் நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த இந்த படத்தில் கதாநாயகியாக ஊர்வசி நடித்திருந்தார்.

தற்போது 37 வருடங்கள் கடந்த நிலையில், முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது

இயக்குனரும் நடிகருமான சசிகுமார் தான் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாகத்தின் ரீமேக் உரிமையை பெற்று நடிக்க உள்ளார் சசிகுமார். மேலும் ஊர்வசி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முந்தானை முடிச்சு படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், காட்சிகளும் இன்னும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்திருக்கின்றன.

காட்சிக்கு காட்சி சுவாரசியம் அளிக்கக்கூடிய வகையில் முந்தானை முடிச்சு படத்தை இயக்குனர் பாக்யராஜ் எழுதி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அன்றைய காலகட்டத்தில் வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்த படமும் இதுவாகும்.

முந்தானை முடிச்சுக்கு மற்றும் ஒரு மிகப்பெரிய வெற்றி என்றால் இசைஞானி இளையராஜாவின் இசை ,பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் முந்தானை முடிச்சு படத்தை எந்த தொய்வும் இல்லாமல் தரமாக இயக்கியிருப்பார்.

தற்போது முந்தானை முடிச்சு இரண்டாம் பாகத்தை சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் போன்ற படங்களை இயக்கிய எஸ்.ஆர். பிரபாகரன் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.